×

இபாஸ் உத்தரவை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை தேவை! தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை!!

சென்னை : உதகை மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் இபாஸ் பெற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“வருடத்தில், ஓரிரு மாதங்கள் மட்டுமே, சுற்றுலாப் பயணிகள் குவியும் இடங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகள் அம்மலைவாழ் மக்களின் பெரும் பொருளாதார நம்பிக்கையாக உள்ளது.
ஆனால், உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி அங்குச் செல்லும் வாகனங்கள் இ-பாஸ் பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள திட்டம் இப்பொழுது செயல்படுத்தப்பட்டால், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் சுற்றுலாவை நம்பி வாழக்கூடிய மக்கள் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாவர்கள்.

இதனால் உள்ளூர் மக்கள் பொருளாதார இழப்புகளைச் சந்திப்பார்கள். அது அவர்களுக்குப் பேரிழப்பாக அமையும். மேலும் இ-பாஸ் திட்டத்தின் மூலமாக உள்ளூர் வாகனங்களுக்கு நெருக்கடிகள் உருவாகும். இதனால் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்படும் சூழல் உள்ளது.ஆகவே இது குறித்து தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து இந்த புதிய கட்டுப்பாட்டினை ரத்து செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.இரு மலைத் தலங்களுக்கும் செல்லும் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தக் கூடுதல் காவலர்களை காவல்துறை பணியில் அமர்த்தி இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்,”இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இபாஸ் உத்தரவை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை தேவை! தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Jawahirullah ,Tamil Nadu government ,CHENNAI ,Mamata ,Madras High Court ,Utkai ,Kodaikanal ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்